கோடீஸ்வரி என்ற பெயரில் பெண்களுக்கான கேம் ஷோ தனியார் டிவி சேனல் ஒன்றில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி, புகழ்பெற்ற குரோர்பதி நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு தமிழில் பெண்களுக்காக முதன் முதலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிவி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராதிகா, தற்போது முதல் முறையாக தொகுப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கான போட்டோஷூட்டை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளாராம் ராதிகார். விரைவில் ஆடிசனும் நடக்க உள்ளதாம். பெண்களின் அறிவுக்கூர்மை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

