மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளாவே தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்களது படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர்.. அதுமட்டுமல்ல கடந்த வாரம் போல இந்த வாரமும் எந்த படங்களும் ரிலீசாகப்போவதில்லை..
அதுமட்டுமல்ல மக்கள் யாரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்பதால் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையும் அரசு ரத்து செய்துள்ள நிலையில் ஓணம் பண்டிகைக்கும் படங்கள் எதுவும் ரிலீஸாகாது என்றே தெரிகிறது. இந்த நிலையில் இன்று தனது டிராமா படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்ய ஏற்கனவே முடிவு செய்திருந்த மோகன்லால், அதற்கு இது சரியான நேரம் இல்லை என ரிலீஸை தள்ளிவைத்து விட்டாராம்..
