ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி, முடிவுற்றிருந்த நிலையில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி இன்று(நவ., 24) முதல் ஒளிபரப்பாகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான கலைஞர்கள் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்தது. இதில் 12 ஜோடிகள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர சிறப்பு பிரிவுக்கு மாற்றுத் திறனாளி கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியை தீபக் தினகர் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா, சுதா சந்திரன் மற்றும் லைலா பணியாற்றுகிறார்கள். நடிகை லைலா இந்த நிகழ்ச்சி மூலம் சின்த்திரைக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது