‛காலா, விஸ்வாசம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜிவி பிரகாஷின் ‛ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் நடிப்பவர், டப்பிங் கலைஞராக மாறியிருக்கிறார்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‛ஆக்ஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றனர். இதில் நடிகை அகன்ஷா லட்சுமிக்கு டப்பிங் பேசியிருக்கிறார் சாக்ஷி.
‛‛டப்பிங்கில் எனது முதல் அனுபவம். என் வாழ்வில் புதிய வழிகள் திறக்கப்படுகின்றன, மகிழ்ச்சி” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

