ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக விதார்த் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜோதிகா பேசும்போது, நான் மூன்று தமிழ் நடிகர்களுடன் நடிக்கும்போது மட்டும் மிகவும் செளகரியமாக உணர்வேன் என்று சொன்னவர், சூர்யா, அஜீத், மாதவன் என்று அந்த மூன்று ஹீரோக்களின் பெயரை சொன்னார்.
ஆனால், ரஜினி, கமல், விஜய், விக்ரம், சிம்பு என மேலும் பல ஹீரோக்களுடனும் ஜோதிகா நடித்துள்ள போதும் இந்த மூன்று ஹீரோக்களுடன் நடிக்கும்போது மட்டும் செளகரியமாக உணர்ந்தேன் என்று அவர் சொன்னதை மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதமாக்கி வருகிறார்கள்.
