பிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது இப்போதைய டிரண்ட். மறைந்த நடிகையும், முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக உருவாக உள்ளது. இதை இரண்டு நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளன.
விப்ரி மீடியாவை சேர்ந்த பிருந்தா, ஜெயலலிதா வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாரிக்க இருப்பதாகவும், பிப்., 24-ம் தேதி ஜெ., பிறந்த நாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இயக்குநர் விஜய், இப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று, பேப்பர்டேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனமும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாகவும், பிரியதர்ஷினி இயக்குவதாகவும் அறிவித்துள்ளது.
நான்கு மாதங்களாக, இந்தப் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியிடப்படும். பிப்.24-ல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

