ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி, கங்கனாவை வைத்து ‛தலைவி’ என்ற படத்தை இயக்குகிறார் விஜய். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஒல்லியான உடல் தோற்றத்தை கொண்ட கங்கனா இப்படத்திற்காக ஜெயலலிதா போன்று மாற வேண்டும் என்பதற்காக இரண்டே மாதத்தில் 20 கிலோ எடையை அதிகரித்துள்ளார்.

