கலகலப்பு-2 படத்தை அடுத்து ஜெய் நடிக்கும் படம் நீயா-2. விமல் நடிப்பில் ‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘நீயா-2’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் நீயா. நாகின் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்கான ‘நீயா’ படம் பழிவாங்கும் பாம்பு பற்றிய கதை. தற்போது ஜெய் நடிக்கும் படத்திற்கு ‘நீயா-2’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதால், இது ‘நீயா’ படத்தின் தொடர்ச்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம், ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறாராம் ஜெய். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.