தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.