‛கோமாளி’ படத்தை அடுத்து ‛பூமி, ஜனகனமன’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் பூமி படத்தை, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் இயக்க, ஜன கன மன படத்தை அஹ்மத் இயக்குகிறார்.
ஜெயம் ரவியின் 25வது படமாக பூமி தயாராகிறது. டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி ஒரு பாடல் பாடுவதாக இமான் தெரிவித்திருக்கிறார். மதன் கார்க்கி அந்த பாடலை எழுதியிருக்கிறார். யோகி பி, இதற்கு முன்பு ஜெயம் ரவி நடித்த ‛டிக் டிக் டிக்’ படத்திலும் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

