குக்கூ, ஜோக்கர் படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த ராஜுமுருகன் இயக்கத்தில், ஜீவா — நடாஷா சிங் ஜோடியாக நடிக்கும் ஜிப்ஸி, மார்ச் 6ல் வெளியாகிறது.படம் குறித்து, ஜீவா கூறுகையில், ”நாடோடி ஒருவனின் வாழ்க்கை மூலம், ஒட்டுமொத்த சமுதாயம் குறித்த விஷயங்களை, இயக்குனர் ராஜுமுருகன் சிறப்பாக கூறியுள்ளார். நாடோடியாக நடித்ததன் மூலம், நிஜமாகவே நாடோடி போல் வாழ ஆசையாக உள்ளது,” என்றார்.

