Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீரோ’ வாங்கிய 10 கோடி

November 11, 2018
in Cinema
0

படத்தின் பெயர்தான் ‘ஜீரோ’. ஆனால், வெளியீட்டிற்கு முன்பே கோடியில் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஷாரூக்கான் குள்ளமான மனிதராக நடிக்கும் ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் ஒரு வாரம் முன்பாக யு டியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமான பார்வைகள், லைக்குகள் என சாதனைகளைப் படைத்தது.

நான்கு நாட்களிலேயே 10 கோடி பார்வைகளைப் பெற்று ‘ஜீரோ’ டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் அனைத்து இணைய சமூக வலைத்தளங்களிலும் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. யு டியூபில் மட்டும் தற்போது 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், பேஸ்புக்கில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும், யு டியூபில் இதுவரை 17 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

இந்திய அளவில் அதிகப் பார்வைகள், லைக்குகள் பெற்ற முதல் படம் என்ற பெருமையை ‘ஜீரோ’ பெற்றுள்ளது. படத்தின் டிரைலரே இத்தனை கோடிகளைக் கடந்துள்ளது என்றால் படம் வெளியானபின் அது வசூலில் பல கோடி சாதனைகளைப் படைக்கும் என பாலிவுட் வட்டாரம் எதிர்பார்க்கிறது.

Previous Post

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 3 பிரிவில் போட்டியிடும் தமிழ் படம்

Next Post

சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

Next Post
சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures