காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் மைதானத்தை முற்றுகையிட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
நேற்று மோடியின் சென்னை வருகையைக் கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த சூழலில், காவிரி ஒருங்கிணைத்தது தமிழினத்தை..! உலக அரங்கம் உற்று நோக்க அறவழியில் நம் அனைவருக்குமான நீதியை வென்றே தீருவோம் என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உணர்ச்சிகரமாக டுவீட் செய்துள்ளார்.
பல்வேறு சமூகப்பிரச்சனைகளிலும் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ் .

