அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 11 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்க்குதல் நடத்தினர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இந்த நிலையில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியோரை ராணுவத்தினர் மீட்டனர்.