சென்னையில் நடைபெற்ற சல்மான் கானின் தபங் 3 புரொமோஷனுக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா வருகை தரவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள படத்தின் புரொமோஷனுக்கு சோனாக்ஷி சின்ஹா செக்ஸியாக சேலைக்கட்டி ரெடியாகி விட்டார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சேலையைக் கூட எப்படி செக்ஸியாக கட்டுவது என்பதை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தபங் முதல் பாகத்தில் இருந்தே சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வரும் சோனாக்ஷி மூன்றாவது பாகத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
சோனாக்ஷியின் கட்டம் போட்ட சேலையை பார்த்த ரசிகர்கள், அவரது லுக் குறித்து மிகவும் ஹாட்டாகவும் ஸ்பைசியாகவும் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வரும் வேளையில், சில நக்கல் புடித்த நெட்டிசன்கள், இது சேலை அல்ல லுங்கி சோனாக்ஷி என கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்

