தெலுங்குத் திரையுலகத்தில் பாகுபலி படங்களுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக உருவாகி வரும் படம் சைரா. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதுப், தமன்னா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் 150 பேர் அந்த நாட்டிற்குச் சென்றுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் போர்க்களக் காட்சி அங்கு படமாக்கப்படுகிறது. படத்தில் சுமார் 8 நிமிடங்கள் இடம் பெறும் இந்தக் காட்சிக்காக சுமார் 50 கோடி வரை செலவு செய்கிறார்களாம். ஐந்து வார காலம் அதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் கற்பனைக் கதையாக அமைந்தன. இந்த சைரா படம் உண்மைக் கதை என்பதால் தெலுங்குத் திரையுலகத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும் என படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகிறார்களாம்.