சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள ‘சைரா’ படம் அடுத்த வாரம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படத்தில் 3 நிமிடக் காட்சிக்கு கமல்ஹாசன் ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்துள்ளதாக சிரஞ்சீவி பெருமையுடன் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அவருடைய தம்பி பவன் கல்யாணும் கொடுத்திருக்கிறார்களாம்.
கமல்ஹாசன் அதற்கு சம்மதித்ததற்கு நன்றி தெரிவித்தார் சிரஞ்சீவி. அது படத்தில் கோல்டன் டச் ஆக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

