தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இன்று ஜனவரி16-ந்தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால், சைரா படத்தில் அவரது பர்ஸ்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கழுத்தில் ஒரு சிங்கப்பல் செயின் தொங்க, கையில் வாள் ஏந்தியபடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தில் அவர் ராஜபாண்டி என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.

