ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள காலா கரிகாலன் படத்தின் செம்ம வெயிட்டு என்ற பாடலை அதன் தயாரிப்பாளர் தனுஷ் இன்று வெளியிட்டார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா கரிகாலன் என்ற படத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாக இருந்தது.எனினும் இதன் வெளியீடு தற்போது ஜூன் மாதத்துக்கு தள்ளி போனது. வரும் மே 9-ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் மே தினத்தையொட்டி செம்ம வெயிட்டு பாடலின் சிங்கிள் டிராக் மட்டும் வெளியானது.
இந்த பாடலை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் யூடியூப்பில் வெளியிட்டார். ரஜினியின் காலா திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நெல்லையில் இருந்து மும்பைக்கு இடம்பெறும் குடும்பத்தில் நடைபெறும் கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சில டீஸர் காட்சிகள் வெளியாகின. அதில் கியாரே செட்டிங்கா, வேங்கையன் மவன் ஒத்தைல நிக்க, தில்லிருந்தா மொத்தமா வாங்கலே என்று ரஜினிகாந்த் பேசும் வசனம் பிரபலமானது.