உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது பருவநிலை மாற்றம். இதனால், பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் தொடரந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்