மல்டி ஹீரோ கதையில் மணிரத்னம் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் செக்கச்சிவந்த வானம். தாதா கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த வியாழன் அன்று வெளியான இந்தப்படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களிலும் சென்னையில் ரூ. 3.78 கோடி வசூலித்துள்ளது. முக்கியமாக ஞாயிறு அன்று ரூ. 1 கோடி வசூலித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வசூலித்த பட வரிசையில் இந்த படம் 9வது இடத்தை பிடித்துள்ளது.