சூர்யாவும், இயக்குனர் ஹரியும் ‛ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 படங்களில் இணைந்தனர். இந்த நிலையில், சிங்கம்-3 படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தை இயக்கிய ஹரி, அடுத்தபடியாக மீண்டும் சூர்யாவிற்காக கதை தயார் செய்தார்.
தற்போது சூரரைப்போற்று படத்தை முடித்து விட்ட சூர்யா, அடுத்தபடியாக ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

