செல்வராகவன் இயக்கி வரும் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து, அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு நடக்கிறது.
இந்தநிலையில், இப்படத்தில் நாயகியாக புருவ அழகி பிரியா வாரியரிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த முதல் படமான ஒரு ஆடார் லவ் என்ற படமே இன்னும் வெளியாகாத நிலையில், சில மலையாள படங்களில் தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்.