மலையாளத்தில் தற்போது மம்முட்டி நடித்துவரும் படம் ‘மதுர ராஜா’. புலிமுருகன் பட இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் மம்முட்டியின் தம்பியாக ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.. இந்த படத்தில் பிரபல மலையாள காமெடி அஜு வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர் ஒன்று படக்குழு வெளியிட்டது அதில் சுரு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஜு வர்கீஸ் நடிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக்கண்டு கேரள சூர்யா ரசிகர்கள் சூர்யாவை கிண்டலடிக்கும் விதமாக இந்த பெயரை வைத்துள்ளனர் என சோசியல் மீடியாவில் சண்டைக்கு கிளம்பியுள்ளனர். காரணம் சில கேரள சோசியல் மீடியா பக்கங்களில் சூர்யாவை ‘சுரு’ என்று குறிப்பிடுவது பழக்கம்.
தனது கதாபாத்திர பெயர் சூர்யாவுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குள்ளானதை உணர்ந்த அவர்கள் உடனே தனது, சோஷியல் மீடியா பக்கத்தில் நடிகர் சூர்யாவின் பெயருக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.. மேலும் தான் சூர்யாவின் மிக தீவிரமான ரசிகன் என்றும் அவர் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.