இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப்போற்று படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.
தமிழில் வெறும் இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ள ஒரு சாதாரண நடிகையான அபர்ணா பாலமுரளியை சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்ததில் இருந்தே, இந்த படம் நிச்சயம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என சொல்லாமலேயே தெரிகிறது.
அதற்கு ஏற்றாற்போல் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு நெடுமாறன் ராஜாங்கம் என்றும் அவருக்கு மனைவியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளிக்கு பொம்மி என்றும் அழகிய தமிழ்ப்பெயர்களாக வைத்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

