பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் ரூ.60 லட்சத்திலும், ரூ.80 லட்சத்திலும் 2 சொகுசு கார்களை விலைக்கு வாங்கினார். அந்த கார்களை கேரளாவில் பதிவு செய்தால் அதிக வரி செலுத்த வேண்டும் என்பதால் குறைந்த வரியை வசூலிக்கும் புதுச்சேரியில் பதிவு செய்தார். இதற்காக அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி ஆவணங்களை காட்டி காரை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.19 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சுரேஷ் கோபி கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை ஆனார். இந்த வழக்கில் தற்போது திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விரைவில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

