தமிழ் சினிமாவின் பழைய காதல் ஜோடியாக இருந்தாலும் இன்னமும் ஹாட் ஆன காதல் ஜோடியாக இருப்பவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு சில திரையுலகினருக்கும், பல ரசிகர்களுக்கும் புகைச்சலை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இந்த காதல் ஜோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை ஜோடியாக வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோயில், கோயிலாக சுற்றி வந்த புகைப்படங்கள் வைரலானது, செய்திகளாகவும் வெளிவந்தது.
இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டு, நயன்தாரா தான் இன்னும் கிறிஸ்துவ மதத்தையும் பின்பற்றுகிறேன் என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது. காதல் ஜோடிகளுக்கு சாதியாவது, மதமாவது, என்பதை இந்த ஜோடி நிரூபிக்கப் பார்க்கிறதா அல்லது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி பகிர்கிறார்களா என்று தெரியவில்லை.
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொண்டு முரட்டு சிங்கிள்ஸ்களின் சாபத்திலிருந்து தப்பிங்கப்பா. ம்ம்ம்…. காதல் ஜோடிகள் யார் சொல்வதைக் கேட்கப் போகிறார்கள்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நயன் – விக்கி காதலில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் உலா வந்தது. தற்போது இந்தப் புகைப்படங்கள் மூலம் அவர்களது உறவில் எந்த மாற்றமுமில்லை என்பது தெரியவந்துள்ளது.

