மெர்குரி படத்தை அடுத்து பிரபுதேவா கைவசம் ‘லக்ஷ்மி’, ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, மற்றும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் இந்தி பதிப்பான ‘காமோஷி’ ஆகிய படங்கள் உள்ளன. அதன்பிறகு, பார்த்திபன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையில், சல்மான்கானை வைத்து ‘தபாங் 3’ இந்திப் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. இத்தனை கமிட்மெண்ட்டுக்கு இடையில் நேமிசந்த் ஜபக் அடுத்து அடுத்து தயாரிக்கும் படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். இந்தப் படத்தில், முதன்முறையாக போலீஸாக நடிக்கிறார் பிரபுதேவா.
‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் பிரபுதேவாவுடன் எழுத்தாளராக பணிபுரிந்த ஏ.சி.முகில் இயக்குகிறார். இவர் இதற்குமுன் சாந்தனு நடித்த கண்டேன் என்ற படத்தை இயக்கியவர். கண்டேன் படம் வணிக வெற்றி பெறாதநிலையில் அடுத்தப்பட வாய்ப்பு அமையாமல் இருந்தார்.
தன் சிஷ்யனுக்கு பிரேக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரை அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நேற்று மாலை வெளியிட்டார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

