மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கு சென்ற நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், சிவாஜியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக டுவிட்டரில் பதிவிட்ட கமல், “அய்யா, நடிகர் திலகத்தின் பிறந்தநாள். அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் ஒருவனாய்… என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்” என பதிவிட்டிருந்தார்.