‛கோலமாவு கோகிலா’ படத்தினை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிதாக ஒரு படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு டாக்டர் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. படம் குறித்து, நெல்சன் கூறியிருப்பதாவது: விஜய் டி.வி.,யில் நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொண்டு இருந்தேன். அந்த காலத்தில், எனக்கு உதவியாளராக பணியாற்றியவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதனால், எனக்கு அப்போதிருந்தே சிவகார்த்திகேயன் பற்றி தெரியும்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. வருங்காலத்தில், இணைந்து ஒரு படம் பண்ணனும் என்று அடிக்கடி பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பின், அவருக்கேற்ற கதையும் அமைந்தது. கதையை அவரிடம் சொன்னதும் ஓகே சொல்லி விட்டார். படத்தை துவங்கி விட்டோம். நடிகர் சிவகார்த்திகேயனை, சந்தித்த நாள் முதல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர், எம்.பி.ஏ., படித்துவிட்டுதான், விஜய் டி.வி., வேலைக்கு வந்தார்.
வித்தியாசமானவர். பணிவானவர். புத்திசாலி; உழைப்பாளி. என்னிடம் எத்தனையோ பேர் பணியாற்றி உள்ளனர். அவர்களில், அபார வளர்ச்சி கண்டிருப்பவர் அவர்தான். அவரது உழைப்புக்கேற்ற விஷயங்களும் சரியாக அமைந்தன. ஆரம்பத்தில் இருந்தே, நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இருவரும் பேசாமல் இருந்ததே கிடையாது. அவரது கஷ்டம், சந்தோஷம் எல்லாம் எனக்கு தெரியும். இப்படிப்பட்டவரை இயக்குவது என்பது எளிது. அந்தப் பணியைத் தான் டாக்டர் படத்தில் செய்யப் போகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

