சீமராஜா படத்தை அடுத்து ராஜேஷ், ரவிக்குமார், மித்ரன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதுதவிர தனது முதல் தயாரிப்பாக கனா படத்தை தயாரித்துள்ளார். நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதையாக உருவாகி உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். டிசம்பரில் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் இரண்டாவதாக ஒரு படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் வேணு என்கிற புதியவர் இயக்க, விஜய் டிவி புகழ் ரியோராஜ் ஹீரோவாகவும், ஷிரின் காஞ்ச்வாலா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.