சோசியல் மீடியாவில் தனது வாழ்வில் ஒவ்வொரு முக்கிய தருணங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வரும் சமந்தாவை 5 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள். தற்போது நாக சைதன்யாவுடன் மஜிலி படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் இணைந்து நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மஜிலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நவநாகரிக உடையில் தான் எடுத்துக்கொண்ட ஒரு அழகியலான போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சமந்தா. நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அந்த புகைப்படத்திற்கு சில மணி நேரங்களில் மூன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

