சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. ஸ்டாலின் படத்திற்கு பின் திரிஷா மீண்டும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் இணைகிறார். ரெஜினா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். ராம்சரண் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்கிற ஆலோசனை நடந்து வந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சிரஞ்சீவி 152வது படத்தின் வில்லனாக்கியிருக்கிறார் கொரட்டல்ல சிவா.

