அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, மீண்டும் அஜித்தை வைத்து பில்லா-3 படத்தை இயக்கப்போவதாக கூறி வந்தார். ஆனால், அது ஒர்க் அவுட்டாகவில்லை. இந்நிலையில், தற்போது பார்ட்டி படத்தை இயக்கி வரும் அவர், அடுத்தபடியாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, இந்த படத்திற்கு அதிரடி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நாளை (ஜூலை 10) காலை 11 மணிக்கு சிம்புவை வைத்து தான் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று வெங்கட்பிரபு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
