சிம்பு ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் வெளியில் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் எப்போதும் நட்பாக இருக்கிறார்கள். படங்களில் ரசிகர்களை உசுப்பேற்ற ஒருவரை தாக்கி ஒருவர் பன்ஞ் டயலாக் பேசிக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள்.
சிம்பு நேற்று தனது 35வது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். பிறந்தநாள் கேக் வெட்டிய சிம்பு, முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், பிறகு தனுசுக்கும் ஊட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயம்ரவி, மஹத், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வீடியோவை யுவன் சங்கர் ராஜா தனது சமூக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

