வரும் பிப்., முதல் தேதி ரிலீசாக இருக்கும் படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. சிம்பு நடிப்பிலும், லைகா நிறுவன தயாரிப்பிலும், சுந்தர் சி இயக்கத்திலும் உருவான இந்தப் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சாரில், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனால், படக் குழு மிகுந்த சந்தோஷம் அடைந்திருக்கிறது.
காரணம், சிம்பு நடிப்பில் உருவான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தது. வந்தாவா ராஜாவாத்தான் வருவேன் படம் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படம் என்பதால் ‘யு’ சான்றிதழ் கிடைத்துவிட்டது

