மாநாடு படத்திற்காக உடம்பை குறைக்க சிம்பு வெளிநாடு சென்றிருக்கிறார் என்று பல மாதங்களாக சொல்லப்பட்டு வந்த நேரத்தில் திடீரென்று சிம்புவை மாநாடு படத்தில் இருந்தே நீக்குகிறோம் என்று அப்பட டைரக்டர்வெங்கட்பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் அறிவித்தனர். அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அப்போது அறிவித்தனர். அதையடுத்து, மகா மாநாடு என்ற படத்தை தான் இயக்கி, தயாரித்து நடிக்கப்போவதாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்புதரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது மப்டி கன்னட படத்தின் ரீமேக், மற்றும் ஹன்சிகாவின் மஹா படத்திலும் நடித்துள்ள சிம்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தவர் நேற்று முனதினம் சென்னைக்கு வந்தார். அப்போது அவர் பெரிய அளவில் தாடி மீசை வைத்திருந்தபடி புதிய கெட்டப்பில் என்ட்ரி கொடுத்ததால் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது. அதை அவரது ரசிகர்களும் டிரண்டிங் செய்து வருகிறார்கள். அதோடு நீங்கள் படங்களில் நடிக்காவிட்டாலும் பெறவாயில்லை. இந்த கெட்டப்பே போதும் என்கிற ரேஞ்சுக்கு டுவிட்டரில் கமெண்டுகள் கொடுத்து சிம்புவை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இப்படியான நிலையில், சில தயாரிப்பாளர்களை சிம்பு நஷ்டப்படுத்தியதை முன்வைத்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பஞ்சாயத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அதன்காரணமாக ரெட்கார்டு விழும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் இன்னொரு பக்கம் பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆக, இதுபோன்ற பஞ்சாயத்துகளையெல்லாம் வழக்கம்போல் சிம்பு விரட்டியடிப்பாரா? இல்லை அதில் வீழ்ந்து போவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

