செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் தெலுங்கு ரீமேக் படம், வெங்கட்பிரபுவின் மாநாடு, கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-2 ஆகிய படங்களில் நடிக்கிறார் சிம்பு.
இதில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் விண் ணைத்தாண்டி வருவாயா-2 படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மன்மதன், சிலம்பாட்டம் படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள சிம்புவை இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்புக்கு மாற்றப்போகிறாராம் கெளதம்மேனன்.