தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள சீனியர் ஹீரோயின்களில் அனுஷ்காவும் ஒருவர். 2005ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக ‘சூப்பர்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வெளிவந்த ‘பாகுபலி’ படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
அனுஷ்கா சினிமாவில் நடிக்க வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் #15YearsofAnushkaShettyREIGN என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரென்டிங்கில் கொண்டு வந்தனர்.
தன் 15 ஆண்டு திரையுலக வெற்றியை ரசிகர்கள் கொண்டாடியதற்கு அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். “உங்கள் அனைவருக்கும் என்றென்றும் நன்றி. உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பாக, கவனமாக இருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் மேலும் பல சிறப்புகள் அமைய வாழ்த்துகள்,” என குறிப்பிட்டுள்ளார்.