அவள் படத்திற்கு பிறகு சைத்தான் க பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இடையில் மலையாளத்தில் கம்மார சம்பவம் என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை,தி டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சித்தார்த் ஜோடியாக கேத்ரின் தெரஸா நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், காளி வெங்கட், கபீர் சிங் ஆகியோரும் முக்கிய ரோலில் இணைந்துள்ளார். சாய் சேகர் என்ற புதியவர் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை (ஜூன் 25) நடந்தது.

