இந்திய இசையின் பொக்கிஷமான ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கி மாநிலத்தின் விளம்பர தூதராக பணியாற்றும்படி, அம்மாநிலம் அரசு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுத்தது. இதற்கும் ரஹ்மானும் சம்மதம் சொல்லியிருந்தார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிக்கிம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. சிக்கிம் அரசின் மாநில தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநிலத்தின் சாதனைகளை உலகளவில் கொண்டு செல்லும் பணியை ரஹ்மான் மேற்கொள்வார் என மாநில தலைமை செயலாளர் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

