நடிகர் அருண் விஜய்க்கு இந்த ஆண்டு ஏற்றம் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சில நாட்களுக்கு முன்பு வெளியான அவரது தடம் படம், டீசன்ட்டான வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.. இது ஒருபுறம் இருக்க ஒரு பக்கம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வேறொரு ஹீரோவின் படத்தில் வில்லன் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் அருண் விஜய் தயங்குவதில்லை.
அந்தவகையில் தற்போது பிரபாஸ் நடித்துவரும் ‘சாஹோ’ படத்தில் முக்கியமான கேரக்டரில் அருண்விஜய் நடித்து வந்தார். நேற்றோடு அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டன. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அருண்விஜய், “ஒரு நினைவு கூறத்தக்க பயணமாக இந்த படத்தில் நடித்த அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் தியேட்டர் அனுபவத்தை பெறுவதற்காக காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.