பிரேமம், காளி ஆகிய மலையாளப் படங்களில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தவர் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்திலும் நடிக்கும் சாய்பல்லவி, சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் விக்ரமின் கெட்ச் படத்தில் நடிக்கயிருந்த சாய்பல்லவி, அந்த படத்தின் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அந்த படத்தில் இருந்தே விலகி விட் டார். அதனால் அந்த வேடத்தில் பின்னர் தமன்னா நடித்தார்.
இந்தநிலையில், இப்போது வரை கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் சாய்பல்லவி. அதோடு, அவரது பாப்புலாரிட்டியை கருத்தில் கொண்டு ஜவுளி, நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு அழைத்த வண்ணம் உள்ளார்களாம். ஆனால் சாய்பல்லவிக்கு அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அதனால் கடைகள் திறப்பு விழா சம்பந்தமாக யாரும் என்னை அணுக வேண்டாம் என்று தனது சார்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.