ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் சாமி-2. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் 2 நிமிட டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. அந்த டீசர் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் சாமி-2 டிரைலரை கிண்டல் செய்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதாவது, முந்தா நாள் வந்த டீசர்ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸயும் ஒன்னு சேர்த்து ஒரு டிரெய்லர். ஸ்ஸ்ஸப்பா என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து விக்ரமின் ரசிகர்கள் கஸ்தூரியை ஆபாச வார்த்தைகளால் திட்ட, அவரும் தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
அதில் ஒன்றாக, “சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு” என பதிவிட்டுள்ளார்.
மேலும், முந்தாநாள் வந்த டீசர் என்று கஸ்தூரி சொன்னது மிர்ச்சி சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2.ஓ படத்தின் டீசரைத்தான். அந்த படத்தில் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.