‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், கல்யாணி, அபய் தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஹீரோ’.
இப்படம் அறிவிக்கப்பட்ட நாளன்றே விஜய் தேவரகொன்டா, மாளவிகா மோகனன் நடிக்க, ஆனந்த் அண்ணாமலை இயக்க ‘ஹீரோ’ என்ற பெயரில் மற்றுமொரு படத்தின் அறிவிப்பு வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டீசர் வெளியீடு வரை வந்துவிட்டார்கள். நாளை காலை இப்படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
‘ஹீரோ’ தலைப்பு பற்றிய சர்ச்சை, சண்டை இருந்து வரும் நிலையிலும் டீசர் வெளியாக உள்ளது. இதற்கு மேலும் இவர்கள் தலைப்பை மாற்றுவார்களா என்பது சந்தேகம்தான். விரைவில் இது பற்றி ஒரு வழக்கை இருவரில் ஒருவர் தாக்கல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

