விஜய்யைப் பொறுத்தவரை தனது படங்களின் பாடல்களில் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுக்க வேண்டும் என்பதில் கூடுதலாக மெனக்கெடுவார். குறிப்பாக, வித்தியாசமான முறையில் கால், கைகளை வளைத்தபடி நடனமாடுவதில் விஜய் திறமைசாலி.
அந்த வகையில், தற்போது தான் நடித்துள்ள சர்கார் படத்தின் ஒரு பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து நடனமாடியிருக்கிறாராம் விஜய். இதுபற்றி அந்த படத்தில் நடனம் அமைத்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் விடுத்துள்ள செய்தியில், விஜய் பட நடனம் என்றாலே ஏதாவது வித்தியாசமான அசைவுகளை வைக்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். காரணம், விஜய்யும் அதை எதிர்பார்ப்பார்.
எத்தனை நீளமான ஸ்டெப் வைத்தாலும் அதை சிங்கிள் டேக்கில் ஓகே செய்யக்கூடியவர் விஜய். அந்த வகையில், சர்கார் படத்தின் ஒரு பாடல் காட்சியில் பல்லவி முழுக்க அவர் ஒரே டேக்கில் நடனமாடி அசத்தினார். அந்த வித்தியாசமான நடன அசைவு விஜய் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்கிறார் நடன மாஸ்டர் ஸ்ரீதர்.