விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையொட்டி ரிலீஸ் தொடர்பான வேலைகள் உச்ச கட்டத்தை எட்டி உள்ளன. மற்றொருபுறம் விஜய் ரசிகர்கள் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சர்காரில் விஜய் புகைப்பிடிக்கும்படியான போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளன. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தியேட்டர் உரிமையாளர்களின் கவனத்திற்கு, அரசு உத்தரவுப்படி, சர்கார் பட பேனர், போஸ்டர், போட்டோ கார்டுகளில் புகைப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். இதனை அனைத்துத் தியேட்டர் உரிமையாளர்களும் செயல்படுத்த வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
