ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
சர்கார் படத்தின் உதவி இயக்குனர் கதை வருண் ராஜேந்திரனுடையது என்கிற சர்ச்சை சில நாட்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அதில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சர்கார் படத்தின் டிக்கெட் புக்கிங் நவம்பர் 2-ந் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. இந்த தகவலை அப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.