விஜய் – முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பழ கருப்பையா, ராதாராவி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திலிருந்து சிம்ட்ராங்காரன், ஒரு விரல் புரட்சி என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை(அக்., 2) சர்கார் படத்தின் மொத்த இசையும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் டிராக் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு…
01. சிம்ட்ராங்காரன்….
பாடியவர்கள் : பாமா பாக்யா, விபின் மற்றும் அபர்ணா நாராயண்
02. ஒரு விரல் புரட்சி…
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ்
03. டாப்டக்கர்…
பாடியவர்கள் : மொகித் சவுகான்
04. ஓ மை கார்ட் பொண்ணு…
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், ஜோனிதா
05. சிஇஓ., இன் த ஹவுஸ்…
பாடியவர்கள் : நகுல் மற்றும் பிளாஷி
சர்கார் படத்தின் மொத்த பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். இசை வெளியீட்டு விழா, சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியின் வளாகத்தில் மாலை 6மணியளவில் நடக்கிறது.