முன்னணி தெலுங்குப்பட இயக்குநர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா இணைந்து நடிக்க கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான படம் ‘அத்திரண்டிகி தாரேதி’.
அதிகவசூலை குவித்து இப்படம், ஆந்திராவில் சாதனை படைத்ததோடு நான்கு நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தப் படத்தை தமிழில் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற பெயரில் சுந்தர்.சி இயக்கியுள்ளார். பவன் கல்யாண் நடித்த கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். நாசர், ரம்யா கிருஷ்ணன், பிரபு, கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ், மஹத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களுடன் சிம்பு நடித்த இந்தப்படமும் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
சிம்புவுக்கு லைகா சம்பள பாக்கி வைத்ததால். ஒரு பாடல்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு சம்பளம் செட்டில் பண்ணப்பட்ட பிறகே பாடல்காட்சியில் நடித்துக் கொடுத்தார். எனவேதான் பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் சம்பள விவகாரத்தினால் இனி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதில்லை எனற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு. இதன்காரணமாகத்தான் இந்தியன் 2 படத்தில் சிம்புவிற்கு பதிலாக சித்தார்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

